வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூரை சேர்ந்தவர் அருள் சுடர். வயது 49. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜான்சன் (வயது 52). இவவர்கள் இருவரும் கூட்டாக காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் அருகில் வாடகை கட்டிடம் எடுத்து அதில் எலெட் ரிக் பொருட்கள் விநியோகம் செய்யும் மையத்தை நடத்தி வருகின்றனர். இருவரும் மாலை வேலையில் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் மாலையும் நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

அருள் சுடர், ஜான்சன் இருவருக்கும் மது போதையில் தலைக்கேறி உள்ளது. அப்போது கொடுக்கல் வாங்கல் குறித்து இருவரும் பேசி உள்ளனர். போதையில் இந்த பேச்சு வாக்குவாதமாக மாறியது. சிறுது நேரத்தில் இது கைகலப்பில் முடிந்துள்ளது.
அப்போது அருள்சுடர் தன்னிடம் இருந்த லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை எடுத்து நீட்டி மிரட்டி உள்ளார். இதை ஜான்சனும் பிடிங்கி மிரட்டி உள்ளார். இதுவரை நண்பர்கள் மத்தியில் ஏற்படும் தகராறாவே இந்த தகராறும் இருந்துள்ளது. ஜான்சன் கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்த பின் தான் நிலைமை வேறு விதமாக மாறியது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி.. சித்தூர் கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!

அருள்சுடரின் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியை ஜான்சன் மது போதையில் கையாண்ட போது தவறுதலாக அது வெடித்தது. அருள்சுடர் முதுகில் துப்பாக்கி தோட்ட பாய்ந்துள்ளது. நிலைமை சீரியஸ் ஆனதை அறிந்த நண்பர்கள் இதை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளனர். லைசன்ஸ் இல்லாத துப்பாக்கி என்பதால், போலீஸ் கேஸ் ஆகும். அப்போது அருள் சுடர் ஜெயிலுக்கு போக வேண்டி வரும். அதே போல் நண்பரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஜான்சனும் கம்பி எண்ண வேண்டிய நிலை ஏற்படும் என நண்பர்கள் உணர்ந்துள்ளனர்.

இதன் காரணமாக கீழே விழுந்து கம்பி குத்தியாதாக கூறி அருகே இருந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளனர். அதை நம்பிய மருத்துவர்களும் ஆப்ரேஷன் செய்துள்ளனர். ஆப்ரேஷனில் உடலில் இருந்து துப்பாக்கி தோட்டா கிடைத்ததும் டாக்டர்கள் உஷாரகினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மாட்டிக்கொண்டதை உணர்ந்த ஜான்சன், உண்மைகள் அனைத்தையும் கக்கி உள்ளார்.

இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை மேற்கொண்டதில் ஜான்சன்தான் உரிமம் இல்லாத கைதுப்பாக்கியை கொண்டு சுட்டது தெரியவந்தது. இதை அடுத்து ஜான்சனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடமிருந்து உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியும் தோட்டாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அருள் சுடருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? உரிமம் இல்லாத துப்பாக்கியை அவர் ஏன் வைத்திருந்தார்? என்பது தொடர்பாகா போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!