சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சம் பெற்றுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் வாங்குவது என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 740 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆகிறது.
இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்! முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
இதையும் படிங்க: திறக்கப்பட்டது திரெளபதி அம்மன் கோயில்.. 300 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்..!