350 ரூபாய், 5 ரூபாய் புதிய நோட்டுகள் வெளி வருகிறதா? 200 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
இந்தியாவில் கரன்சி நோட்டுகளை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தான் அதிகாரம் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை புதிய கரன்சி நோட்டுகள் தேவைப்படும்போது அதை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகபுதிய 350 ரூபாய் நோட்டுகளையும் 5 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கிஅறிமுகம் செய்திருப்பதாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்! அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு
கடந்த 2023ஆம் ஆண்டில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டை வாபஸ் பெற்றது. இதனால் ரூ.500 ரூபாய் நோட்டு நாட்டின் மிகப்பெரிய மதிப்புள்ள கரன்சி நோட்டாக மாறியது.
இது குறித்து விளக்கம் அளித்த இந்திய ரிசர்வ் வங்கி, "இதே போன்ற 350 ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புகைப்படங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தன. இவை அனைத்தும் போலியான ரூபாய் நோட்டுகள்.
புதிய ரூபாய் நோட்டு எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. தற்போது ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே உள்ளன என்று ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளும் (ரூ. 2, ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500), புழக்கத்தில் இருக்கும் வரை எந்த இடத்திலும் செல்லுபடியாகும்"என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 26 இன் மூலம் இதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து இருக்கிறது.
200 ரூபாய் நோட்டு
நிறுத்தப்படுமா?
இதற்கு இடையில் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்படுமா? என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுகள் என்றால் அது 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் தான். அதிலும் குறிப்பாக சொல்வது என்றால் எல்லோருடைய சட்டைப் பயலுமே 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்க்கலாம்.
பொதுவாகவே கள்ள நோட்டுகள் பரவாமல் இருப்பதை தடுக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவுரை கூறி வருகிறது ரிசர்வ் வங்கி எப்போது ஒரு புதிய ரூபாய் நோட்டை வெளியிட்டாலும் அதனை எப்படி அடையாளம் காண்பது என்பதை பற்றி விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும்.
அப்போது யாரேனும் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக உள்ளூர் நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பொதுவான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம்.
ஆனால் இது பற்றி ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் விசாரித்த போது இந்த தகவல் உண்மை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பிறப்புக் குடியுரிமை ரத்து: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எந்த வகையில் பாதிக்கும்?