×
 

பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மாதவிடாய் பற்றி ஆலோசிப்பதை தவிர்க்கும் 90% பெண்கள் : ஆய்வில் தகவல்...

பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக 91.7 சதவீதப் பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் தவிர்த்துவிடுகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சுலப் சுகாதார இயக்கம் அறக்கட்டளை(எஸ்எஸ்எம்எப்) அமைப்பு சார்பில் “மாதவிடாய் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை அமைதியை எதிர்த்துப் போராடுதல்” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை சுலப் அமைப்பின் தேசிய இயக்குநர் நிர்ஜா பட்நகர் வெளியிட்டார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: 


பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக 91.7 சதவீதப் பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் தவிர்த்துவிடுகிறார்கள்.
குறிப்பாக வயதுவந்த சிறுமிகள் தங்களின் மாதவிடாய் நேரத்தில் பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த தயங்குகிறார்கள். ஏனென்றால், அங்கு கழிவறைகள் சுத்தமின்றி பராமரிக்கப்படும் காரணத்தாலும், நீர், சோப்பு, முறையான கதவுகள் இல்லாததால் மாதவிடாய் நேரதத்தில் பள்ளி கழிவறையை பயன்படுத்த தயங்குகிறார்கள். 


பள்ளிகளிலும் முறையான வசதிகள், மாதவிடாய் நேரத்தில் மாணவிகளுக்கு தேவையான சுத்தமான கழிவறை சூழல் இல்லாததால், வேறுவழியின்றி சிறுமிகள் மாதவிடாய் நேரத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைஇருக்கிறது. இதனால் ஆண்டுக்கு 60 நாட்கள்வரை வீட்டிலேயே இருந்து பள்ளிக் காலத்தை இழக்கிறார்கள்.
“மாதவிடாய் நேரத்தில் சுத்தமான சூழலை நிர்வகிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை நாங்கள் விரும்புகிறோம். மாதவிடாய் என்பது ஒரு சுழற்றி, அதை ஒரு காரணமாக வைத்து பள்ளிக்குச் செல்லாமல் தவிர்ப்பது பின்னர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலை உண்டாக்கும், திருமணத்தைக் கட்டாயப்படுத்தி, பொருளாதாரத்தில் பங்கேற்பதை மேலும் கட்டுப்படுத்தும்” என சுலப் அமைப்பின் தேசிய இயக்குநர் நீரஜ் பட்நாகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்றங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறை அவசியம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...


மாதவிடாய் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள், பிரச்சினைகள், குறிப்பாக கரும்புதோட்டம், செங்கள்சூளை, சுரங்கம், தொழிற்சாலைகில் வேலைக்குச் செல்லும் நிலை, சந்திக்கும் பிரச்சினைகளை, சவால்களை இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா உள்பட 14 மாவட்டங்களில் உள்ள பெண்களிடம் மாதவிடாய் நேரத்தில் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பீட் மற்றும் தாராஷிவ் ஆகிய மாவட்டங்களில் கரும்புத் தோட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 


இதில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களில் 89.9% பேர் மாதவிடாய் நேரத்தில் எந்த தீவிரமான சிக்கலையும் சந்திக்கவில்லை என்றும், தாராஷிவ் மாவட்டத்தைச் சேர்ந்த 70 சதவீதம் பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவர்களை அனுகமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் சில பரிந்துரைகளை அந்த அமைப்பு வழங்கியுள்ளது. அதில், பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளைக் களையவும், மாதவிடாய் நேரத்தில் சுகாதாரமான கழிவறைகள், சூழலை ஏற்படுத்தவும் நிர்வாகம், அரசு முயல வேண்டும். வயல்கள், கரும்பு தோட்டங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் உரிய தண்ணீர் வசதியை ஜல் ஜீவன் மிஷன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு இன்றைய சூழலி்ல் மிகவும் முக்கியமானது, புதிய சவால்களை சந்திக்கும் நிலையில் நவீனமாக இருக்கும் மாதவிடாய் கப் போன்ற முறைகளை பெண்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும். இந்த மாதவிடாய் கப் எப்படி பயன்படுத்துவது, அப்புறப்படுத்துவது, போன்ற விழிப்புணர்வு செய்ய வேண்டும் என மருத்துவர் நீலம் கோர்கே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share