பிறப்புக்குடியுரிமை: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை
பிறப்புக் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சீட்டல் நகர நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது
அமெரிக்காவில் எந்த நாட்டு தம்பதிகளுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புக் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதிபர் ட்ரம்ப் உத்தரவு அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட விதிமீறல் என நீதிமன்றம் தெரிவி்த்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக கடந்த திங்கள்கிழமை பதவி ஏற்றார். அவர் அதிகாரத்துக்கு வந்தவுடன் நிர்வாகரீதியான பல உத்தரவுகளில் கையொப்பமிட்டார். அதில் முக்கியமானது அமெரிக்காவில் எந்த நாட்டு தம்பதிக்கும் அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு இயல்பாகவே குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இந்த பிறப்புக் குடியுரிமைச் சட்டத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகளுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் குடியுரிமை கிடைக்க வேண்டுமெனில் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் அமெரிக்கராக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் சட்டப்பூர்வ குடியேறியாக, கீரின் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும், அல்லது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், குடியேறிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகக் கிடைக்கும் குடியுரிமை இனிமேல் வழங்கப்படாது. பணி நிமித்தமாக ஹெச்1பி விசா, எல்1விசா போன்ற விசாக்களில் அமெரிக்காவுக்கு வந்து குழந்தைப் பெற்றுக்கொண்டாலும் அந்தக் குழந்தைக்கு இயல்பாகக் கிடைக்கும் அமெரிக்க குடியுரிமையும் இனிமேல் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் 22 மாகாணங்களில் உள்ள மக்கள் உரிமை பாதுகாப்பாளர்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களி்ல் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சீட்டல் நகரில் பிறப்புக் குடியுரிமை ரத்து உத்தரவுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவசர வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த மனுவின் விசாரணை சீட்டல் மாவட்ட நீதிபதி ஜான் கோஹன்னோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, வாஷிங்டன் துணை அட்டர்னி ஜெனரல் லேன் போலோஜோலா கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் வேறுநாட்டு தம்பதிகளின் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காது, அவர்கள் அமெரிக்கர்களாக மதிக்கப்படமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி ஜான் கோஹன்னோர் கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப் பிறப்புக் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டவிரோதமானது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத்த டை விதிக்கிறேன்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அமெரிக்கவாழ் இந்தியர்களை அச்சுறுத்தும் பிப்ரவரி 20... குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி...
மேலும் அரிசோனா, இல்லிநாய்ஸ், ஓரேகான் மாநில ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக தடை விதிக்க வேண்டும். 127 ஆண்டுகளுக்கு முன்பே, பிறப்புக் குடியுரிமைச்ச ட்டம் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்று நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்! அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு