வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்… விமானம் மீது ஹெலிகாப்டர் மோதி 18 பேர் பலி… டிரம்பை குறிவைத்து சதியா...?
போடோமேக் நதி இன்னும் பனிக்கட்டி போல் உறைந்து கிடப்பதால், மக்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. பொடோமாக் ஆற்றில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
வெள்ளை மாளிகை அருகே பெரிய விமானம் விபத்துக்குள்ளானது, ஆற்றில் இருந்து 18 உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு, விமானம் போடோமாக் ஆற்றில் விழுந்தது. ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் 60 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டருடன் விமானம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க இருந்தது. இந்த விமானம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இருந்து வாஷிங்டனுக்கு வந்து கொண்டிருந்தது.
அது கனடியன் ஏர் விமானம். தற்போது அனைத்து விமான தரையிறக்கங்களும் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு விமானங்களின் இடிபாடுகளும் தற்போது போடோமாக் ஆற்றில் மேலே நடந்துள்ளது. மீட்பு பணி நடந்து வருகிறது. விமானத்துடன் மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் (H-60) ஆகும். இந்த விபத்தை அடுத்து, அவசரநிலை காரணமாக ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலில் செருப்பே போடாமல்.... திமுகவை அகற்றும் சபதத்தின் பாதையில் அண்ணாமலை..!
வெள்ளை மாளிகைக்கும், விமான நிலையத்துக்கும் இடையிலான விமான தூரம் மூன்று கிலோமீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. இந்த விபத்து நடந்தபோது, டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். இது விபத்தா? அல்லது சதியா? என்பது இன்னும் தெரியவில்லை. ராணுவ ஹெலிகாப்டர் திடீரென வந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போடோமேக் நதி இன்னும் பனிக்கட்டி போல் உறைந்து கிடப்பதால், மக்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. பொடோமாக் ஆற்றில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
‼️Mass casualty event: Washington DC
— JB 🇺🇸 (@BarkosBite) January 30, 2025
Searches underway as an American Airlines plane has crashed into a helicopter while landing at Reagan Airport Washington D.C.
pic.twitter.com/sB1CB5MtWy
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், தங்கள் அன்புக்குரியவர்கள் விமானத்தில் இருக்கக்கூடும் என்று அஞ்சுபவர்களுக்காக 800-679-8215 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியில் இருப்பவர்கள் தொடர்பு விவரங்களுக்கு news.aa.com ஐப் பார்வையிடலாம்.கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது யுஎஸ் விர்ஜின் தீவுகளில் இருப்பவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்ணை டயல் செய்யலாம்.
இதையும் படிங்க: சட்டவிரோத குடியேறிகளை பயங்கரவாதிகளுடன் சிறையில் அடைக்கத் திட்டம்… கொலை நடுங்க வைக்கும் டிரம்ப்..!