கதறித் துடித்த குடும்பம்... மனைவி- 3 குழந்தைகளை துப்பாக்கியல் சுட்டுக் கொன்ற பாஜக நிர்வாகி..!
யோகேஷ் ரோஹிலா சஹாரன்பூர் மாவட்ட பாஜக நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தனது சொந்த மனைவி மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டதில் 2 மகன்கள் இறந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்குப்போராடி வருகின்றனர்ட்.
உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் பாஜக நிர்வாகி தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவியும் மற்றொரு குழந்தை படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்த பிறகு, இரு குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர். பாஜக நிர்வாகியின் மனைவியும், மற்றொரு குழந்தை போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் யோகேஷ் ரோஹிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சஹாரன்பூர் மாவட்ட பாஜக நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இந்த சம்பவத்திற்கான உறுதியான காரணம் இதுவரை காவல்துறையினரால் தெரிவிக்கப்படவில்லை.சஹாரன்பூரின் கங்கோ பகுதியில் உள்ள சங்கதேடா கிராமத்தில் வசிக்கும் பாஜக நிர்வாகி செய்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘அடடா மழைடா அடமழை டா’... இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
அவசரமாக, தடயவியல் குழு மற்றும் காவல் படையுடன் புறநகர் எஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கை விசாரிக்கத் தொடங்கினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, யோகேஷ் ரோஹிலாவே இந்த சம்பவம் குறித்து அண்டை வீட்டாருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் சுட்டுக் கொன்றதாகக் கூறினார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைப் பார்த்த பிறகு, அவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாஜக நிர்வாகியை கைது செய்து விசாரிக்கத் தொடங்கினர்.
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தபோதும் அதற்கு உறுதியான காரணங்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் கூறும்போது, பாஜக தலைவரின் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதே நேரத்தில் அவரது மனைவி, ஒரு குழந்தை பலத்த காயமடைந்தனர். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மோசடியாக பதிவு செய்யப்பட்ட BS-4 வாகனங்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..!