×
 

ஆங்… தொப்பி… தொப்பி… பதவியேற்பு விழாவில் ட்ரம்பின் முத்த ஏக்கம்… வெட்கப்பட்டுப்போன மனைவி..!

கேபிடல் ரோட்டுண்டாவில் நடந்த இந்த விசித்திரமான நிகழ்வை எதிர்பாராத டிரம்பபும், மெலனியாவும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டனர். 

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவின் போது, ​​பதவியேற்பதற்கு சற்று முன்பு அவர் தனது மனைவி மெலனியாவை முத்தமிட முன்னோக்கி சென்றபோது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.மெலனியா ஒரு பெரிய தொப்பி அணிந்திருந்ததால் டிரம்ப் மெலனியாவை முத்தமிட முயன்றபோது, ​​அவரது தொப்பி குறுக்கே வந்து தடுத்தது.

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். அவரது மனைவி மெலனியா, குழந்தைகள் இவான்கா, டொனால்ட் ஜூனியர், எரிக், பரோன், டிஃப்பனி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில்தான் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவிடம் சென்றார். இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட முகங்களை நீட்டினர். ஆனால் மெலனியாவின் பெரிய தொப்பி டிரம்ப் முத்தமிட அனுமதிக்கவில்லை. கேபிடல் ரோட்டுண்டாவில் நடந்த இந்த விசித்திரமான நிகழ்வை எதிர்பாராத டிரம்பபும், மெலனியாவும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டனர்.

 


டொனால்ட் டிரம்ப்- மெலனியாவின் இந்த 'ப்ளைன் கிஸ்'சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'மெலனியா வேண்டுமென்றே இவ்வளவு பெரிய தொப்பியை அணிந்திருந்தார். அதனால் டிரம்ப் தன்னை முத்தமிட முடியாது என்று நினைத்து இதைச் செய்திருக்கிறார். அவர் ஒரு புத்திசாலி பெண்'' என்றும், "மெலனியாவை முத்தமிட டிரம்ப் மேற்கொண்ட முயற்சியில் தொப்பி ஜெயித்து விட்டது.யாரும் இவ்வளவு பெரிய தொப்பியை அணியக்கூடாது. தொப்பியால் டிரம்ப், மெலனியாவின் கன்னத்தில் முத்தமிட முடியவில்லை'' எனறு பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டிரம்புடன் 13 வருட நட்பு..! இந்தியாவின் ரியல் எஸ்டேட்துறையில் மிகப்பெரிய கூட்டாளி… யார் இந்த கல்பேஷ் மேத்தா..?


டொனால்ட்- மெலனியா இடையே இதுபோன்ற விசித்திரமான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. நவம்பரில் புளோரிடாவில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதும் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. டிரம்ப், மெலனியாவை முத்தமிட்டபோது, ​​அவரது மனைவி ஒத்துழைக்கவில்லை. இதன் பிறகு டிரம்ப் அவரை கட்டிப்பிடித்தார். இதனால் மெலனியாவும் சிரித்தார்.


அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். இது டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம். கடுமையான குளிர் காரணமாக, அமெரிக்காவில் பதவியேற்பு விழா 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கேபிடல் ரோட்டுண்டாவிற்குள் நடைபெற்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் பைபிளில் கைவைத்து டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

இதையும் படிங்க: ஒரேயொரு விருந்து, ரூ.2000 கோடி வசூல்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share