அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற மூன்றாம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரள கடலோர பகுதியில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னையில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மகன் பலி..
தொடர்ந்து தமிழகம் பொதுவை மற்றும் காரைக்கால் இன்று முதல் வருகின்ற மூன்றாம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் வருகின்ற மூன்றாம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அடமானம் வைத்த பத்திரத்தை தொலைத்த வங்கி... ரூ.2 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு..!