சீக்கிரமே ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கதி தான்.. அடித்து கூறும் பாஜக தலைவர்..!
டாஸ்மாக் ஊழலில் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்காமல் அரசியல் செய்து வருவதாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மத்திய அரசின், புதிய சட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த மாநாடு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான கால்கோள் விழாவில் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் கலந்துகொண்டு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். தவறான பயன்பாட்டை சரியாக்கும் வகையில் தான் வக்ஃபு திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் பாஜக அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மாநாடு நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
இந்த மாநாட்டில் மத்திய அரசின் புதிய சட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பொருட்காட்சி நடைபெற உள்ளது என்று கூறிய அவர், இபொருட்காட்சியில் பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் திட்டங்கள் குறித்த விவரங்கள் காட்சிக்கு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கதறித் துடித்த குடும்பம்... மனைவி- 3 குழந்தைகளை துப்பாக்கியல் சுட்டுக் கொன்ற பாஜக நிர்வாகி..!
தொடர்ந்து பேசிய அவர், திமுக நிர்வாகிகளையும் திமுக பேச்சாளர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்க, வேந்தர் பதவி உதவும் என தான் நினைப்பதாகவும், துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வசூலிக்க, கையூட்டு பெறுவதற்கான வாய்ப்பை திமுகவிற்கு இந்த சட்டம் உருவாக்கிவிடும் என்றும் கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக இப்படி ஒரு தீர்ப்பை பெற்று இருக்கிறது., முதலீடு செய்து அறுவடை செய்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்காமல் அரசியல் செய்து வருவதாகவும், மத்திய அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி காற்றிலே வாள் வீசிக் கொண்டிருக்கிறார் என்றும் கெஜ்ரிவாலுக்கு நேர்ந்த நிலை திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வரும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு... நீட் விலக்கு பெறுவோம்... மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!