சமீபத்தில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தில் சீனியர் அமைச்சர்கள், சீனியர் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக தகவல் கசிகிறது. அமைச்சர் பொன்முடி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆன காலத்தில் அவரும் எம்.எல்.ஏ ஆகி கட்சியில் செல்வாக்காக மூத்த அமைச்சராக வலம் வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகமாக இல்லாமல் வெற்றிகரமான அரசியல்வாதியாக 35 ஆண்டு காலம் கோலோச்சி வந்த பொன்முடிக்கு ஆளுநருடனான மோதல் இறங்குமுகமாக அமைந்தது.

சொத்து குவிப்பு வழக்கில் பதவி பறிக்கப்பட செந்தில் பாலாஜிக்கு ஆதரவு அளித்ததுபோல் அவருக்காக திமுக தலைமை எதையும் செய்யவில்லை என்பது அவருக்கு அதிர்ச்சியான முதல் வருத்தம். 2024 தேர்தலில் சர்ச்சையில் சிக்கிய துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குகூட சீட்டு கொடுக்கப்பட்டது, ஆனால் கௌதம சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடி தனக்காக தானே முயற்சி எடுத்து தண்டனையை நிறுத்தி வைத்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர் கைது.. தலைமறைவாக இருந்தவரை தட்டி தூக்கியது போலீஸ்..!

ஆனால் அவரது உயர் கல்வித்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு ஜூனியர் அமைச்சர் அந்தஸ்துள்ள வனத்துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இதே காலக்கட்டத்தில் சிறையில் உச்ச நீதிமன்ற சுட்டிக்காட்டலையும் மீறி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அமைச்சர் பதவி அதுவும் இரண்டு சக்தி சாய்ந்த துறைகள் மீண்டும் அவருக்கே ஒதுக்கப்பட்டது.

இத்தனைக்கும் பொன்முடியை ஒப்பிடுகையில் அரசியலிலேயே மிகவும் ஜூனியர் செந்தில் பாலாஜி. திமுகவில் அவரது அனுபவம் சொல்லவே வேண்டாம் 2019-க்கு பிறகுதான் திமுகவுக்குள்ளேயே வந்தார் ஆனாலும் அவருக்கு தனி கவனிப்பு இருந்தது. இத்தனைக்கும் ஜாமின் விதிமுறைகளை மீறியதாக செந்தில் பாலாஜி மீது உச்ச நீதிமன்றம் கோபமாக இருக்கிறது.
வனத்துறை கொடுக்கப்பட்டபோது ஜூனியரான கோவி செழியன் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். அப்போது சொல்லப்பட்ட காரணம் ஆளுநருடன் மோதல் போக்கை பொன்முடி கடைபிடித்தார் என்பதே. ஆனால் இன்றுவரை முதல்வர் தொடங்கி பலரும் கவர்னருடன் மோதல் போக்கில்தான் உள்ளனர். பொன்முடி அதிகாரம் பிடுங்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட சப்பை காரணம் அது.

இந்நிலையில் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பிலும் விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனை நியமித்துள்ளது திமுக தலைமை. இதில் விழுப்புரம், வானூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியை அவரிடம் ஒப்படைத்ததும், அதிமுகவிலிருந்து வந்தவருக்கு எம்.எல்.ஏ பதவி தற்போது மாவட்ட பொறுப்பாளர் பதவி என்பதால் பொன்முடி தரப்பு நொந்துபோயிருப்பதாக கேள்வி, அதேபோல் முன்னாள் அமைச்சர் மஸ்தான் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதும் பொன்முடிக்கு பின்னடைவு என்கிறார்கள்.

இதேபோல் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே முக்கிய பொறுப்பு, எம்.எல்.ஏ மேயர், இப்ப மாவட்ட பொறுப்பாளர் பதவியா என்கிற பொறுமல்களும் தோபு வெங்கடாச்சலம் நியமனம், சந்திரகுமாருக்கு எம்.எல்.ஏ வாய்ப்பு, திருப்பூர் தினேஷுக்கு மேயர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பதவி, திருவள்ளூரில் அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட கோவிந்தராஜுவை நீக்கி புதியவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு அனைத்துமே ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது.

இதேபோல் அப்துல் வகாப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் அவருக்கு மீண்டும் பதவி பெரியவர் மைதீன்கானுக்கு பதவி பறிப்பு என்பதும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: 'ஆண்மை என்றால் வீரம்...' அமைச்சர் விட்ட வார்த்தை - திருத்திய துணை முதல்வர் உதயநிதி.!