''கூண்டுக்கிளியல்ல. ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026ல் மக்கள் தூக்கி எறிவார்கள். சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் தான் திமுகவினர்'' என ஹெச்.ராஜாவுக்கு திமுக அமைச்சர் சேகர் பாபு சவால் விடுத்துள்ளார்.
''அறநிலையத்துறையை கொள்ளையடிக்கும் சேகர் பாபுவை சிறையிலே வைக்காமல் இந்த சனி ஓயாது'' என ஆவேசமாகப் பேசி இருந்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

அவரது விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, ''கூண்டுக்கிளியல்ல, கூவும் குயில்கள்... அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள் கூண்டுக்கிளியல்ல, கூவும் குயில்கள். திமுக கூவுகின்ற குயிலாக தான் இருக்கிறது, கூண்டுக்கிளியல்ல. ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026ல் மக்கள் தூக்கி எறிவார்கள். சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் தான் திமுகவினர். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை தான் எங்களை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: IT, ED எல்லாம் வச்சிக்கிட்டு... அது பீஸ் போன பல்பு... அமித் ஷாவை வம்பிழுத்த சேகர் பாபு...!

திருச்சியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, ''நண்பர்களே இந்த கூட்டத்திற்கு, மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி இங்கு இருக்கின்ற ஒரு பாசிச திராவிடியன் ஸ்டாக் ஆட்சியின் காரணமாக நாம கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்குவதா? என்னைய்யா நடக்கிறது? பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்… பிணம் தின்னும் சாஸ்திரங்கள்…. இங்கு என்ன ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது? ஊழலிலே ஊறித் திளைத்துப் போன ஒரு அரசாங்கம், ஊழலால் மூழ்கிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடியன் ஸ்டாக் ஆட்சி…

இன்னும் நீங்கள் இருக்கப் போவது 13 மாதங்கள்தான் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரையும் தூக்கி சிறையில் அடைக்கும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி அதனுடைய கருத்தை மக்களிடம் சொல்ல முடியாமல்... அந்த அளவுக்கு அகங்காரமா உங்களுக்கு? ஆணவமா? அவர் யாரு…? அது பீடையா..? ஆமாம் பீடை பாபு (சேகர் பாபு) என்னை ஏழரை என்கிறான். நான் சனிதான். அறநிலையத்துறையை கொள்ளையடிக்கும் சேகர் பாபுவை சிறையிலே வைக்காமல் இந்த சனி ஓயாது'' என ஆவேசமாகப் பேசினார்.
இதையும் படிங்க: அறநிலையத்துறை இணை ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!