×
 

இஸ்ரோவின் 100-வது ராக்கெட் தயார்! ஜிஎஸ்எல்வி F-15 ராக்கெட் 29ம் தேதி விண்ணில் பாய்கிறது

ஜிஎஸ்எல்வியின் 17-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்-15 ரக ராக்கெட்டாகும், கிரியோஜெனிக் எஞ்சின் மூலம் விண்ணில் செலுத்தப்படும் 11வது ராக்கெட் இதுவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரியோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-15 ரக ராக்கெட், என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வரும் 29ம் தேதி விண்ணில் பாய்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் 100-வது ராக்கெட் இதுவாகும். இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ ஜிஎஸ்எல்பி-எப்15 ரக ராக்கெட் பணிகள் முடிந்துவிட்டன. இந்த ராக்கெட் பணி நிறைவுக்குப்பின்னால் குழுவினரின் அற்புதமான பணி நிறைந்திருக்கிறது. கவுண்டவுடன் அடுத்த 3 நாட்களுக்குள் தொடங்கி ராக்கெட் ஏவப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்எல்வி எப்-15 ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் சதீஸ் தவாண் ஏவுதளத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. என்விஎஸ்-01 சீரிஸ் வகை செயற்கைக்கோள் என்பது 2வது தலைமுறை செயற்கைக்கோள், இது முதன்முதலில் கடந்த 2023, மே 29ம் தேதி ஜிஎஸ்எல்வி-எபி-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய மைல்கல்... செயற்கைக் கோள்களை DOCKING செய்து சாதனை...

என்விஎஸ் சீரிஸின் 2வது செயற்கைக்கோள் என்விஎஸ்-02 இதில் எல்-1, எல்-5, எஸ் பேண்ட் ஆகியவைகள் உள்ளன. இஸ்ரோ கூறுகையில் “ என்ஏவிஐசி என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மண்டலரீதியான வழிகாட்டி செயற்கைக்கோளாகும்.இந்த செயற்கைக்கோள், துல்லியமான இடம், நேரம், உள்ளிட்டவற்றை 1500 கி.மீ அப்பால்வரை கண்டறிந்து கூற முடியும். என்விஎஸ்-01 மற்றும் 02 ரக செயற்கைக்கோள்கள் முற்றிலும் வழிகாட்டி, எல்லைக் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டவை.


ஜிஎஸ்எல்வியின் 17-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்-15 ரக ராக்கெட்டாகும், கிரியோஜெனிக் எஞ்சின் மூலம் விண்ணில் செலுத்தப்படும் 11வது ராக்கெட் இதுவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விவசாயம் முதல் விண்வெளி வரை ..2000 பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம்..மயில்சாமி அண்ணாதுரை பளீச்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share