காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. களத்தில் இருந்து லைவ் அட்டேட்..
தேசத்தையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 தமிழர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பிரபலமான சுற்றுலா தலம் பைசரான் பள்ளத்தாக்கு. பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு நடந்தும், குதிரை சவாரி மூலமும் மட்டுமே செல்ல முடியும். கோடை சீசன் துவங்கியதை அடுத்து, இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் நேற்று இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கு சுற்றி திரிந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர். வெட்டவெளி பகுதி என்பதால் உடனடியாக ஒளிவதற்கு கூட இடமில்லாமல் சிதறி ஓடிய சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். முதலில் ஒருவர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 26 பேர் வரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 10 பேர் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் தாக்குதலில் இறந்தவர்கள் 21 பேரின் அடையாளங்களும் தெரியவந்துள்ளது. அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!
இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சந்துரு என்ற நபர் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில், சந்துரு (83) என்ற முதியவருக்கு தாக்குதலில் காயம் ஏற்படவில்லை எனவும், வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது மகள் நிவேதிதா தெரிவித்தார்.
மாரடைப்பு ஏற்பட்டதால் சந்துரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் அல்ல. பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் சந்துரு இல்லை. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே சந்துருவும் சிகிச்சை பெற்று வருகிறார் என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் 2 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதிகள் இன்று மாலை காஷ்மீர் சென்று, உடனடியாக பணிகளை மேற்கொள்வார்கள். டில்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் அவர்களுடன் தெடர்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். பஹல்காம் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு குறித்த தகவலை பெற தமிழ்நாடு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. Land line : 011 – 24193300 Mobile no: +91 92895 16712 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீங்க" - பிடிஆருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!