×
 

இனி NO பிளாஸ்டிக்..! கேரளா கோர்ட் அதிரடி..!

திருமண விருந்துகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தக் கூடாது என கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும், நீரையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாது அவை மைக்ரோ பிளாஸ்டிக்களாக உடைந்து, உணவு சங்கிலி மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.

பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மனிதர்களுக்கு புற்றுநோய், இனப்பெருக்கப் பிரச்சனைகள் மற்றும் பிற சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் பெண்கள் சொல்வது உண்மையாகாது... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

பிளாஸ்டிக் மாசுபாடு சுற்றுச்சூழலை மட்டுமல்லாது நமது ஆரோக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் அச்சுறுத்துகிறது. திருமண விருந்துகளில் உணவு பரிமாறும்போது, அருந்துவதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தருவது வழக்கமாகி விட்டது. 

இந்நிலையில், பிளாஸ்டிக் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் கருத்துகளை தெரிவித்தது.

 

திருமண வரவேற்பு, விருந்து, முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதில், கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம் . மேலும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் 

100க்கும் அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பிளாஸ்டிக் பயன்படுத்த, உள்ளூர் அரசு அமைப்பிடம் இருந்து லைசன்ஸ் பெறும் முறையை கொண்டு வர வேண்டும் என கூறினர்.

மேலும், மலைப் பிரதேசங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், இயற்கையை அழித்து வருவதாக வருத்தம் தெரிவித்த நீதிமன்றம், ரயில்வே துறையும்,பிளாஸ்டிக் குப்பை கழிவுகளில் பொறுப்பில்லாமல் இருப்பதாகவும் தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது, ரயில்வே துறையின் பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

மேலும், குப்பை சேராமல் தடுப்பதோடு, தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

இதையும் படிங்க: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்... சொல் பேச்சு கேட்க மாட்டீர்களா என நீதிமன்றம் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share