×
 

அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுகவுடன் உறவை முறித்த முக்கிய கட்சி.. அழிவு உறுதி என அதிமுகவுக்கு சாபம்!!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை அதிமுக தனியாக கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம்  உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இதில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஓரிடத்தை அதிமுக ஒதுக்கியது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதிமுக கூட்டணிலேயே எஸ்டிபிஐ நீடித்தது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக கூட்டணியிலேயே சந்திப்பது என்றும் அக்கட்சி முடிவு செய்திருந்தது.



இந்நிலையில் மார்ச் 25 அன்று யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். இதன்பிறகு அமித் ஷா, "2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்" என்று பதிவிட்டார். இதனால், அதிமுக - பாஜக கூட்டணி உருவாகிவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனாலும், அதிமுக - பாஜக கூட்டணி என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடலாக விருந்து.. இபிஎஸ் உற்சாக முடிவு.!



இதற்கிடையே ஏப்.9 அன்று சென்னைக்கு வந்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, பழனிசாமியுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் கூட்டணி என அமித் ஷா அறிவித்தார். அதிமுகவுடன் அமைக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியும் இறுதியும் செய்யப்பட்டுவிட்டது.



இந்நிலையில் பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணியை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். " பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் எந்தக் கட்சியுடனும் எஸ்டிபிஐ கூட்டணி கிடையாது. தேவை என்றால், யார் காலிலும் பாஜக விழும். தேவை இல்லையென்றால் யாரையும் எதிர்க்கும். அதுதான் பாஜகவின் ஒரே நிலைப்பாடு. பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போது தமிழ் நாட்டில் ஒரு கட்சி அழியப்போவது உறுதி" என்று அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் ஒருசிலர் அக்கட்சியிலிருந்து விலகினர். தற்போது ஒரு கட்சியே கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

இதையும் படிங்க: பாலுக்கு பூனை காவலா? அதிமுக - பாஜக கூட்டணியை விளாசிய அன்பில் மகேஷ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share