×
 

ரூ.500 வச்சுக்கிட்டு பாஸ் பண்ணி விடுங்க; என் ஆளு பேசாது... இணையத்தில் வைரலான மாணவனின் கோரிக்கை!!

கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என பல்வேறு வகையில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களை பாஸ் பண்ணி விட வேண்டும் என பல்வேறு வகையில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. குறிப்பாக ஒரு மாணவர் தன்னை பாஸ் பண்ணிவிடவில்லை என்றால் அவரது காதலி அவரிடம் பேசாது என தெரிவித்திருப்பது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்த்யியுள்ளது.

முன்னதாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்ததை அடுத்து தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநில மாணவர்கள் சிலரின் செயல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதில் சில மாணவர்கள் தன்னை எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அந்த விடைத்தாளில் 500 ரூபாய் தாளை இணைத்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பேபிஸ்களுக்கு இந்தியா தான் பெஸ்ட்.. வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கருத்து!!

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிகோடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் பகிருந்துள்ளதில், ஒரு மாணவர், தயவு செய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலை தொடர முடியும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார். இன்னொரு மாணவர், 500 ரூபாய் தாளை விடைத்தாளில் வைத்து "டீ குடித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்" என கோரிக்கை வைத்துள்ளார்.

மற்றொரு மாணவர், “நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைத்தால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்" என்றும், இன்னொரு மாணவர் "நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால் என் பெற்றோர் என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டார்கள். என்னுடைய எதிர்காலம் இந்த தேர்ச்சியில் தான் உள்ளது" என கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் விடைத்தாள்களும் அவர்களது கோரிக்கையும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

இதையும் படிங்க: என்னம்மா.. இப்பிடி பண்றீங்களேமா? திருமணமான ஒன்றரை மாதம்.. ஆத்திரத்தில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share