×
 

பஹல்காம் தாக்குதல் சம்பவம்..! தீவிரவாதிகளின் உத்தேச புகைப்படம் வெளியீடு..!

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் தீவிரவாதிகளின் உத்தேச வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தின் எதிரொலியாக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாரமுள்ள பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் 12க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலின் போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளின் உத்தேச வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ துரித நடவடிக்கை..! பேரவையில் முதல்வர் உறுதி..!

ஆசிஃப், சுலைமான், அபு ஆகியோர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த அடிப்படையில் தீவிரவாதிகளின் வரைபடங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

அங்கிருந்த பொதுமக்கள் அழைத்து தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என் ஐ ஏ தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்.. உயிரிழந்தோருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share