கார், வேன், லாரி, டிரக்குகள், பேருந்துகள் சுங்கச்சாவடிகளைக் கடக்க பாஸ்டேக் அட்டையை பயன்படுத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக வேறு புதிய திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மே 1ம் தேதி முதல் அறிமுகம் செய்கிறது.

பாஸ்டேக் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி, வாகனங்கள் செல்வதை விரைவுப்படுத்தியது. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறுகளால் அவ்வப்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், சில நேரங்களில் அதிகமான கட்டணத்தை பாஸ்டேக்கில் இருந்து எடுக்கும் சிக்கலும் இருந்தது வந்தது.
இதையும் படிங்க: சமக்ர சிக்ஸா திட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..!
இதனால் பாஸ்டேக் கொண்டு வந்த போதிலும் வாகன ஓட்டிகள் நீண்டநேரம் முக்கியமான சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் பொருட்டு மே 1ம் தேதி முதல் புதிய முறையை மத்திய நெடுஞ்சாலைத்துறை கொண்டு வருகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாஸ்டேக் முறையை படிப்படியாகக் குறைத்து, செயற்கைக்கோள் அடிப்படையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறையை மத்திய நெடுஞ்சாலைத்துறை கொண்டு வருகிறது.
ஜிபிஎஸ் சுங்கச்சாவடி கட்டண வசூல்!
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சம் மே 1ம் தேதி ஜிபிஎஸ் மூலம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வருகிறது. அதாவது “குலோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்” (ஜிஎன்எஸ்எஸ்) முறையைக் கொண்டு வந்து, பாஸ்டேக் முறை படிப்படியாக நீக்கப்படுகிறது.

சமீபத்தில் நாக்பூரில் மத்திய நெஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை ஏப்ரல் தொடக்கத்தில் செயல்படுத்தப்படுவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் 15 நாட்கள் தாமதம் ஆகிவிட்டது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே 1ம் தேதி ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை செயல்படும்” எனத் தெரிவித்தார்.
எவ்வாறு ஜிஎன்எஸ்எஸ் சிஸ்டம் இயங்குகிறது?
பாஸ்டேக் திட்டம் போலத்தான் ஜிஎன்எஸ்எஸ் முறையும் செயல்படுகிறது. ஆர்எப்ஐடி தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த முறைக்கு வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒரு சிறிய டேக் தேவை. இந்த டேக் மூலம் வாகனங்களின் நகர்வை செயற்கைக்கோள் மூலம் பின்தொடர்ந்து கண்டறிய முடியும். இதற்காக கார்கள், வேன்கள், லாரி, டாரஸ்கள், பேருந்துகள் ஓபியு எனப்படும் டிராக்கர் பொரு்தப்பட்டு நெடுஞ்சாலையை வாகனம் எவ்வளவு பயன்படுத்துகிறது என்பது கணிக்கப்படும். எவ்வளவு தொலைவு பயணித்துள்ளனர் என்பதை கணிக்கிட்டு தானாகவே பயனீட்டாளர் டிஜிட்டல் வாலட்டிலிருந்து பணம் கழிக்கப்படும். இந்த புதிய கணக்கீட்டு முறை போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் முறையிலும் இயங்கும்.

ஏன் ஜிஎன்எஸ்எஸ் சிஸ்டம் கொண்டுவரப்படுகிறது?
1. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு காத்திருப்பது குறையும்.
2. மனிதத் தவறுகளைக் குறைத்து, மோசடிகளைத் தடுக்க முடயும்.
3. வாகன ஓட்டிகளுக்கு யாரையும் சந்தித்து கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, காத்திருக்தத் தேவையில்லை.
4. 2025, ஏப்ரல் 30ம் தேதிவரை பாஸ்டேக் செயல்படும்.
5. 2025 மே 1ம் தேதி முதல் அரசு அங்கீகாரம் பெற்ற ஜிபிஎஸ் வாகனங்களில் பொருத்த வேண்டும்.
6. ஜிபிஎஸ் சிஸ்டம் பொருத்தியபின், பயனாளரின் வங்கிக்கணக்கை இணைக்க வேண்டும்.
இதையும் படிங்க: வக்ஃபு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் எவ்வளவு, அசையா சொத்துக்கள் மதிப்பு எவ்வளவு..?