மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சேர்ந்த முத்தம்மாள் என்ற 90 வயது மூதாட்டி அவரது கணவர் வைரத்தேவர் என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 75 சென்ட் இடம் இருந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதி அருகேயுள்ள தென்பழஞ்சி கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 45 வருடங்களாக விவசாயம் செய்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக திடீரென சிலர் தங்களது இடத்தினை போலி பட்டா மூலமாக ஆக்கிரமிப்பு செய்து வேலி போட்டதாகவும் இது தொடர்பாக கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று தனது குடும்பத்தினருடன் மூதாட்டி முத்தம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூதாட்டி முத்தம்மாள் மற்றும் அவரது மகள், தனது கணவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 75 சென்ட் இடத்தில் கடலை போட்டு விவசாயம் செய்து 45 ஆண்டுகளாக பத்திரம் வைத்துள்ளோம்.

இந்த நிலையில் திடீரென சிலர் தங்களது இடத்தை ஆக்கிரமித்து போலி பட்டா தயாரிப்பு வேலி போட்டுள்ளனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளதால் அதன் அருகே எங்களது இடம் இருப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் துணையோடு தங்களது இடத்தை போலிப்பட்டா உருவாக்கி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்..!
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கூறிய மனுவை கூட அதிகாரிகள் தூக்கி எறிந்து விட்டனர் எனவும், இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பணம் கொடுத்தால் நாங்கள் பட்டா போட்டு கொடுக்க தான் செய்வோம், நீங்கள் பணம் கொடுத்தாலும் பட்டா போட்டுக் கொடுப்போம் என பதிலளிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ரியல் எஸ்டேட் காரர்களிடம் நேரடியாக கேட்டால் தாலுகா ஆபிஸே எங்களோடது தான் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டல் விடுவதாகவும், 45 ஆண்டுகளாக பத்திரம் வைத்து பாதுகாத்து வந்த தங்களது மூன்று ஏக்கர் 75 சென்ற இடத்தை மீட்டு தரவேண்டும் என போலி பட்டா மூலமாக தங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இறந்தவர்கள் பெயரில் உயிருடன் இருப்பதாக கூறி போலி பட்டாவை உருவாக்கி தங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி.. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சைப் பேச்சு..!