தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சேலம் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஷேர்லின் பல்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிந்து வருகிறார்.
ஷேர்லின் பல்மாவின் தந்தையார் உயிரிழந்த நிலையில் தாய் மேரியுடன் ஷேர்லின் பல்மா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், மேரி மருத்துவ சிகிச்சைக்காக வேலூருக்கு சென்று இருந்த நிலையில் வழக்கம்போல, ஷெர்லின் பெல்மா வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு வேலைக்காக சென்றுள்ளார்.

பள்ளி முடிந்த பின்பு மாலை மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பல் மா அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று அவர் பார்த்த போது பீரோவில் இருந்து அவருடைய 70 பவுன் நகை தாய் மேரியின் 30 பவுன் நகை என மொத்தம் 100 பவுன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் திருட்டு போனது தெரிய வந்தது.
இதையும் படிங்க: நகை வியாபாரியை ரவுண்டு கட்டிய கொள்ளையர்கள்.. பறிபோன 1கோடியே 10 லட்சம் ரொக்க பணம்!
இதனை அடுத்து ஷெர்லயின் பாளையமா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறந்தது சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கை நிபுணர்களுடன் விரைந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் அங்கு பல்வேறு தடயங்களை கைப்பற்றி விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். முன்னதாக அதியமான் கோட்டை போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடந்த ரோடு ரோலர்.. லாவகமாக சுருட்டிய மூவர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்!