ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளை எங்கள் குடும்பத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டாம்' என ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், மார்டினின் மகளுமான டெய்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் சமீப காலமாக உச்சரிக்கும் பெயர் ஆதவ் அர்ஜூனா,1982ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள விவசாய குடும்பத்தை பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை ஒய்.டபள்யூ.சி.ஏ வில் முடித்த இவர், திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உயர்கல்வி பயின்றார். இதனையடுத்து மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அப்போது கூடைப்பந்து மீதான ஆர்வம் காரணமாக பல போட்டிகளிலும் கலந்து கொண்டு கோப்பைகளை வாங்கியுள்ளார். இந்திய கூடை பந்து அணிக்காகவும் விளையாடியுள்ள ஆதவ் அர்ஜூனா, பிரபல லாட்டடி அதிபர் மார்டினின் மகளான டெய்ஸி மார்ட்டினை காதலித்து திருமணம் செய்துொண்டார்.
இதனால் அமலாக்கத்துறை மார்ட்டின் வீடுகளில் சோதனை நடக்கும் போதெல்லாம் ஆதவ் அர்ஜூனா வீடுகளிலும் சோதனை நடைபெறும். விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த அவர் தற்போது விஜயின் தவெக கட்சியில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக இருக்கிறார்.

இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!
தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, கட்சித் தலைவர் விஜய் பேசியதை விட, மத்திய அரசையும் திமுக அரசையும் கடுமையாகவே விமர்சித்துப்பேசினார். கபடதாரிகள், அவர்களை அகற்ற வேண்டும் என விஜயை முதலமைச்சராக்க வேண்டும். இதற்காக சிறைக்கும் செல்லத்தயார்.
நாங்கள் சிறைக்குச் செல்லவும் தயார்… செயிண்ட் ஜார்ச் கோட்டைக்கு செல்லவும் தயார் என காரசாரமாக பேசி இருந்தார். ஏற்கெனவே மார்டின் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையில் பல ரெய்டுகள் நடந்து ல வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா மத்திய அரசையும், மாநில அரசையும் சீண்டினால் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்கிற கவலையில் உள்ளது மார்டினின் குடும்பம்.

லாட்டரி அதிபர் மார்டின்
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து இருவரிடமும் அனுசரணையாக நடந்து கொண்டு தொழிலை சிறப்பாக செய்து வந்தவர்தான் ஆதவ் அர்ஜூனின் மாமனார் மார்டின். இந்நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் ஆக்ரோஷ அரசியலால் தொழிலுக்கு பாதிப்பு வருமோ என மார்டின் குடும்பம் அஞ்சுவாதாக கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா ரோஸ் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார்.

டெய்சி மார்டின் ஆதவ்
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் காதல் மனைவியும், மார்டினின் மகளுமான டெய்சி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெய்சி, சமூகவலைதளமான தனது இன்ஸ்ட்ராகிராம் பதிவில், ''நான் டெய்சி. நானும், ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில்முறை வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகளும், நிலைப்பாடுகளும் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன.

மேலும் இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த அறிவிப்பு, ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எங்கள் ஈடுபாடு குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இருவரும் தனித்துவமான வேலை, வாழ்க்கைகளைக் கொண்ட தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் தனியுரிமை, அவரவர் கருத்துக்களை மதிக்கிறோம். எங்களைப்பற்றி வேறுவிதமாக எந்தவொரு தவறான கருத்துக்களை கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் பரஸ்பர நலனுக்காக, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எங்கள் குடும்பத்தை ஒருவருக்கொருவர் தொழில்முறை மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

டெய்சி மாடலிங் துறையில் ஆடை வடிவமைப்பாளராக சர்வதேச அளவில் பிரபலமாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: பாஜகவா..? ஒன்றிணைப்பா..? செங்கோட்டையனுடன் சேர்ந்து எடப்பாடியாரை சந்தித்த தங்கமணி..!