×
 

சூடுபிடிக்கும் 2026 தேர்தல்..! வேதாரண்யம் தொகுதி நா.த.க. வேட்பாளர் அறிவிப்பு..!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இடும்பவனம் கார்த்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளும், புது கூட்டணி அமைக்க உள்ள கட்சிகளும், தனித்து போட்டியிடும் கட்சிகளும், களத்தில் புதுமையாக இறங்கி உள்ள கட்சிகளும் மோத உள்ளன.

தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளனர். இதில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடனும் போட்டியிட உள்ளன. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் தனித்து தான் போட்டியிடப் போவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை  - மதுரை தனியார் பேருந்தில் பழு.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த பயணிகள்!

தனித்துப் போட்டியிடும் தங்கள் நிலைபாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிவித்த சீமான், நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல போராளிகள் என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது.

மேலும் தமிழக வெற்றிக் கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது. அவர்களின் கூட்டணி தொடர்பாக எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி வேதாரண்யம் தொகுதி வேட்பாளரை அறிவித்துள்ளது. வேதாரண்யம் பகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி நாளை நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளார்.

இதையும் படிங்க: டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share