சாலையில் பாடிய எட் சீரன்.. கடுப்பான போலீசார்.. மைக்கை வீசி எறிந்து கலைந்த கச்சேரி...
பிரபல பாடகர் எட் சீரன் பெங்களூருவில் அனுமதி இன்றி சாலையோரம் பாடியதைக் கண்ட போலீசார் மைக்கின் கேவலம் கழட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டனைச் சேர்ந்தவர் இசை கலைஞர் ஆன எட் சீரன். இவர் ஏராளமான கிராமிய விருதுகளைப் பெற்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். தற்போது எஸ் சீரன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நிலையில், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு சென்னை திரும்ப எட் சீரன், நந்தனம் ஒய்எம்சிஏ வில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வகையிலும், அதற்குத் தகுந்தவாறு அவரது நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பணம் கொடுக்கிறியா இல்லையா.. கடை முன் சடலத்தை வீசிய நபர்.. அதிரடி காட்டிய போலீஸ்
இந்த நிலையில் பெங்களூர் சென்ற எட் சீரணை ரசிகர்கள் சூழவே, சாலையோரத்தில் பாடத் துவங்கியுள்ளார். முன் அனுமதி இன்றி அவர் பாடத் துவங்கியதால் அப்பகுதியில் ரசிகர்கள் கூடி பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார், அவர் பாடி பாடிக்கொண்டிருந்த போதே மைக்கின் ஒயரை பிடிங்கி பாடல் கச்சேரியை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த ரசிகர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது ரசிகர் ஒருவர் அதிகாரியின் கையைப் பிடித்து இழுக்க கோபம் கொப்பளித்த போலீசார் தட்டி விட்டு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் வலைதளவாசிகள் பிரபல பாடகரை இவ்வாறு அவ மதிப்பதா என விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, அனுமதி வாங்கிய பின்னரே கச்சேரி நடத்த வேண்டும் என்றும் முன்னறிவிப்பு இன்றி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு கச்சேரி நடத்துவது தவறு என பெங்களூரு போலீசார் புல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் கேமிங்-ஆல் அதிகரிக்கும் தற்கொலைகள்.. புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி காட்டிய ஆணையம்..!