×
 

காற்றில் பறந்த கண்ணியம்... மேடையிலேயே தனது உதவியாளரை தரக்குறைவாக பேசிய திமுக அமைச்சர்...!

திமுக அமைச்சர்கள் அடிக்கடி, கண்ணியமற்றும், கட்டுப்பாடடற்றும் பொது மேடையிலேயே பேசி வருவது வாடிக்கைதான்.


திமுக அமைச்சர்கள் அடிக்கடி, கண்ணியமற்றும், கட்டுப்பாடடற்றும் பொது மேடையிலேயே பேசி வருவது வாடிக்கைதான். பொது மேடையில் தனது உதவியாளரை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரக்குறைவாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த 2023 - 24, 2024 - 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. இதில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, நிகழ்ச்சியில் சாதி ரீதியாக பேசினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்’’ என்று பேசிய சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாட்டு, கண்காட்சியை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தஞ்சையில் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்ற தயாரானார். ''அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று பேசிக் கொண்டிருந்த அமைச்சர், திடீரென பின்ன்னால் திரும்பி தன்னுடைய உதவியாளரை நோக்கி ''எங்கே பரசுராமன்... ஏண்டா எருமை மாடாடா நீ... பேப்பர் எங்கே...'' என மேடையில் மைக்கின் முன்பே டஹரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது.

ஒடு பொது நிகழ்ச்சியின் மேடையில் தனது  உதவியாளரை தரக்குறைவாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் குறைவு...’ துரை வைகோவின் சல்சாப்பு... ஆதாரங்களை காட்டி செம ஆப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share