புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சமீப காலமாக இ-மெயிலில் காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவர்னர் மாளிகை, முதலமைச்சர் வீடு என பல்வேறு முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக இ - மெயில் மூலம் மிரட்டல்கள் வர துவங்கி உள்ளன. போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீடு உள்பட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஆரம்பித்து சமீப எட்டு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடற்கரை சாலையில் காந்தி திடல் அருகே உள்ள புரோமனேட் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பெர்கமாண்ட் ஹோட்டல், மற்றும் காந்தி வீதியில் உள்ள செண்பகா ஹோட்டல், இந்திரா காந்தி சிக்னல் அருகே உள்ள காரை உணவகம், புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில் இரண்டு தனியார் ஹோட்டல்களில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஞானசேகரனின் தம்பியும் குற்றவாளி தான்.. திருட்டு வழக்கில் கைது.. புதுவை போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

மேலும், திலாசுப்பேட்டை மற்றும் அப்பா பைத்தியசாமி கோயி அருகே உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இரண்டு வீடுகளுக்கும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தற்பொழுது விரைந்து உள்ளனர். அங்கு தீவிர பாதுகாப்பு சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் வெளியாட்கள் நுழையா வண்ணம் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
இதேபோல் கடந்த 14ம் தேதி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது. அதனைத் தொடர்ந்து பெரியக்கடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்ற பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மின்னணு சாதனங்கள் மூலம் வதந்தியை பரப்புதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இ-மெயில் முகவரியை ஆய்வு செய்ததில் மர்ம நபர் டார்க் நெட்டை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
இதனால், இந்த மிரட்டல் வெளிநாட்டினர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனையொட்டி, புதுச்சேரி போலீசார், மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைந்தமையத்தின் உதவியை கோரி இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், சைபர் கமண்டோக்களை கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி கால்சென்டர் நடத்தி மோசடி.. பல கோடி ரூபாய் சுருட்டல்.. பலே கேடிகள் சிக்கியது எப்படி?