சோனியாவுக்கு சிக்கல்..! உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க பாஜக பழங்குடி எம்பிக்கள் மனு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை பாஜகவின் பழங்குடிப் பிரிவு எம்.பி.க்கள் நேற்று வழங்கியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்கு எதிராக அவமதிப்புடன், தவறான வார்த்தைகளை சோனியா காந்தி பேசியது அவை மரபுக்கு மாறானது, இது குறித்து விசாரிக்கவும், விவாதிக்கவும் உரிமை மீறல் நோட்டீஸை எம்.பி.க்கள் வழங்கியுள்ளனர்.
பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பகான் சிங் குலஸ்தே, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகரை நேற்று நேரில் சந்தித்து, சோனியா காந்திக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவருக்கு எதிராக அவர் பேசியது குறித்த மனுவை வழங்கினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு நாடாளுமன்றத்தில் உரை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ பாவம் அந்த பெண் குடியரசுத் தலைவர், அந்த உரையை படித்து முடிக்கையில் அசதியாகிவிட்டார். அவரால் எப்படி பொய்களைப் பேச முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்
இதுசமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோ குறித்து பாஜக எம்.பி.க்கள் கூறுகையில் “ குடியரசுத் தலைவர் குறித்து சோனியா காந்தியின் வீடியோ, உயர்குடி மனோநிலை, பழங்குடியினருக்கு எதிரான சிந்தனையை காட்டுகிறது. ஏழைப் பழங்குடி மக்களின் உணர்வுகளை, போராட்டங்களை சோனியா காந்தி இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
சோனியா காந்தியின் இந்த பேச்சு முற்றிலும் நாகரீகமற்றது, அவமதிப்புக்குரியது, நாடாளுமன்ற மரபுக்கு விரோதமானது. ஆதாலால் சோனியா காந்திக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மாநிலங்களவைத் தலைவர் எடுக்க வேண்டும் என உரிமை மீறல் நோட்டீஸ் கோருவோம்” எனத் தெரிவித்தனர்.
பாஜகவைச் சேர்ந்த பழங்குடிப் பிரிவு எம்.பி.க்கள் 22 பேர் சேர்ந்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரைச் சந்தித்து சோனியாகாந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை