×
 

விபத்து..! மதுபோதையில் காரை இயக்கிய பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது..!

சென்னை ஆலந்தூர் அருகே மது போதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே ஒரு கார் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 2 இரு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் 2 கார்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் விசாரித்ததில் அவர் ஓட்டுனர் புஷ்பராஜ் என்பதும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுனராக பணியாற்றி வருவதும், மது போதையில் விபத்தை ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மவுண்ட் குற்றப் புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓட்டுனர் புஷ்பராஜை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு.. நண்பன் மீது கொடூர தாக்குதல்.. கோமாவில் இருந்தவர் இறந்ததால் சிக்கல்..!

இதையும் படிங்க: சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்..! தேனாம்பேட்டை நோக்கி வாகனங்கள் செல்ல தடை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share