×
 

பொன்முடிக்கு வலுக்கும் எதிர்ப்பு..! அதிமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைவ சமயக் குறியீடுகளையும், பெண்களையும் இழிவாக பேசியதாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோகுல இந்திரா உட்பட 1000க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கைகளில் செருப்பை ஏந்தி பெண்களை இழிவாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி இல்லை..! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி..!

இதையும் படிங்க: நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுப்பு.. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share