அல்டிமேட் அறிவிப்புகள்..! சுட சுட விவாதம்.. நிறைவு பெற்றது சட்டப்பேரவை..!
கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.
சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும், மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள், அறிவிப்புகள் வெளியானது.
பட்ஜெட் மீதான விவாதங்களும், சட்ட திருத்த மசோதாக்கள், புதிய மசோதாக்கள் தாக்கலானது. அரசு ஊழியர்கள், காவலர்கள், பெண் காவலர்கள் உள்ளிட்டோருக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக இன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க: தலைகீழா நின்னாலும் தப்பிக்க முடியாது..! கட்டாய கடன் வசூலுக்கு செக் வைத்த உதயநிதி..!
இறுதியாக கட்டாய கடன் வசூலிப்பு தொடர்பாக மசோதா ஒன்றை துணை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கம் செய்திருந்த நிலையில், சட்ட சபையில் குரல் வாக்கெடுக்கும் மூலம் அந்த மசோதாவும் தாக்கல் ஆனது. கலைஞர் பல்கலைக்கழகம், உயிரி மருத்துவ கழிவுகள் மசோதா உள்ளிட்டவை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இப்படியான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: 2026ல் திராவிட மாடல் 2.0..! காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!