×
 

தலைகீழா நின்னாலும் தப்பிக்க முடியாது..! கட்டாய கடன் வசூலுக்கு செக் வைத்த உதயநிதி..!

கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய மசோதா சட்டசபையில் தாக்கல் ஆனது.

கந்து வட்டி, மீட்டர் வட்டி என தாங்கள் பெற்ற சிறு தொகைக்கு வாழ்நாள் முழுக்க வட்டி செலுத்தும் நிலைக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தள்ளப்படுகின்றனர். அதிக வட்டி பெறும் நபர்கள் கடன் பெற்றவர்களை துன்புறுத்தி திரும்பப்பெறும் நிலை இருப்பதால் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இது போன்ற நிலையிலிருந்து மக்களை காக்கும் வகையில் சட்ட மசோதா ஒன்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த நிலையில் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறி உள்ளது.

இதையும் படிங்க: 2026ல் திராவிட மாடல் 2.0..! காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!

கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பிணையில் வெளியில் வர முடியாது என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இது மணிப்பூர் இல்ல.., தமிழ்நாடு..! பேரவையில் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share