×
 

55 கிலோ கஞ்சா பறிமுதல்.. அதிரடி காட்டும் சுங்கதுறை அதிகாரிகள்..!

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 55 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென்கடற்கரை அய்யனார் கோவில் அருகே கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு சந்தேகத்திற்கு இணங்க பொட்டலங்கள் கடந்துள்ளன. இந்த நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இணங்க எடுக்கப்பட்ட பொட்டலங்களை கைப்பாற்றி  ஆய்வு செய்தனர்.

கைப்பற்றப்பட்ட சுமார் 27 பொட்டலங்களில் ஐந்து லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான கஞ்சா ஒதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், இந்த பொட்டலங்களின் உரிமையாளர், இந்த இங்கே வந்தது எப்படி, இதற்கு பின்னால் இருக்கும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயிலில் கஞ்சா கடத்தல்.. இளைஞர் துணிகரம்.. சுற்றி வளைத்த போலீசார்..

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, சொகுசு கார் ஒன்று பொடலங்கலை ஏற்றி வந்து பகுதியில் இறக்கி வைத்தது தெரிய வந்தது. இந்த நிலையில் சொகுசு காரின் பதிவு எண்ணை கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்.. அதிரடி காட்டிய போலீசார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share