ஆசாமி Rocked.. ஊர் மக்கள் Shocked.. மீன்பிடித் திருவிழாவில் அரங்கேறிய சோகம்..!
விராலிமலை அருகே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மீன்கள் சிக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள ராஜகிரி குழுவாய் பட்டி கருங்குளத்தில் ஆண்டுதோறும் மீன் பிடித்தவர்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று மீன்களை பிடிக்க ஆர்வம் காட்டினர். முன்னதாக இன்று வீண்படி திருவிழா நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகின. இதனை அறிந்த சுற்றுவட்டாரத்தினர் ஏராளமானோர் மீன்களைப் படிப்பதற்காக கூட்டம் கூட்டமாக அணி திரண்டனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக இருசக்கர வாகனம் ஆட்டோக்கள் என ஆண்கள் பெண்கள் சிறுவர் என கருங்குளம் கம்மாயில் கண்ணுக்கு எட்டிய வரை மக்கள் தலையாகவே தென்பட்டது. காலை 7 மணி அளவில் ஊர் பெரியவர்கள் வெள்ளைத் துண்டு வீசி அனுமதி அளித்ததை தொடர்ந்து மீன்களைப் பிடிக்க கரையில் காத்திருந்த மக்கள் அவர்கள் கொண்டு வந்த வளை கச்சா கூடை பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கம்மாய்க்குள் குதித்தனர்.
இதையும் படிங்க: இந்து மதத்திற்கு திரும்பிய ராஜஸ்தான் கிராம மக்கள்... கோவிலாக மாறிய தேவாலயம்..!
தொடர்ந்து நீ பிடி நான் பிடி என போட்டி போட்டு ஒருவருக்கொருவர் மீண்டும் மீன்களைத் தேடி அலைந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் ஒருவருக்கு கூட அறை கூடை மீன்கள் வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து தேடியும் மக்கள் மீன்களை பெரிதளவில் காணாததால் சோகம் அனைவரின் முகத்தில் தழுவியது.
குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால் கழுத்தில் கட்லா கெண்டை உள்ளிட்ட மீன்கள் சிக்கும் என்றும் அதனை இன்று ருசி பார்க்கலாம் என்று காத்திருந்த மீன் பிரியர்களுக்கு பெரும் சங்கடமாய் அமைந்தது இந்த திருவிழா. முன்னதாக முறையான பராமரிப்பின்றி கிடைத்த கன்மாயில், விரோதி சமூக விரோதிகள் சிலர் இரவில் சென்று மீன்களைப் பிடித்திருக்கலாம் என அவன் ஊர் பெரியவர்கள் யூகித்து விசாரணைக்கு வித்திட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரத்தான மின்சார ரயில்கள்.. பேருந்து நிலையங்களில் அலை மோதிய பொதுமக்கள்.. திணறிய போலீஸ்!