×
 

தடம் புரண்ட சரக்கு ரயில்.. தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..

தாம்பரம் ரயில் நிலைய பணிமனையில் இருந்து அரக்கோணத்திற்கு கார்களை ஏற்றுச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பனிமனையில் சரக்கு ரயில் வண்டி ஒன்று கடந்த மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்டு வந்தது. இதையடுத்து என்.என்.ஜி எனப்படும் சரக்கு ரயிலில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்று தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு ரயில் புறப்பட்டது. இந்த சரக்கு ரயிலில் ஸ்ரீ பெருமந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து ஏற்றப்பட்டு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சரக்கு ரயிலானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சானிடோரியம் ரயில் நிலையத்திற்கும், தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயிலின் பாதையை பனிமனை யார்டில் இருந்து தாம்பரம் யார்டுக்கு மாற்றும்போது 8, 9, 10 ஆகிய மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

இதில் ஒரு பெட்டி மட்டும் தண்டவாளத்தில் இருந்து முற்றிலுமாக விலகி கீழே இறங்கியது மற்ற இரண்டு பெட்டிகளின் சக்கரங்கள் மட்டும் தண்ட வாளத்தில் கீழே இறங்கின. இதையடுத்து தகவலின் அடிப்படையில் தாம்பரம் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குமரியில் ரயிலை கவிழ்க்க முயற்சி.. ரயில்வே போலீசார் விசாரணை..!

மேலும் தாம்பரம் ரயில்வே பணிமனை யார்டுக்கு செல்லும் தண்டவாளத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் மற்ற பயணிகள் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், மேலும் இந்த விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கோடைகால சிறப்பு அப்டேட்.. ஊட்டி சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share