கோடைகால சிறப்பு அப்டேட்.. ஊட்டி சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்..!
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஊட்டியில் சிறப்பு மலை ரயில் சேவையானது இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான ஊட்டி மலை சிறப்பு ரயிலில் பயணிக்க வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அதன்படி சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிக்குவும், உதகையில் ரம்யமான அழகுக் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு தென்னக ரயில்வே நிர்வாகம் ஊட்டிக்கு சிறப்பு மழை ரயிலை இயக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கோடைகாலம் துவங்கி உள்ளதை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் ஆனது இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோடைகால சிறப்பு ரயில் அறிவிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோன்று ஊட்டியிலிருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு நீ இந்த சிறப்பு ரயிலானது மறு மார்க்கத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊட்டி சிறப்பு ரயில் ஆனது மார்ச் 28ஆம் தேதி அதாவது இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி காலம் வரையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹோலி பண்டிகை எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளிகள்..!