தமிழில் பெயர் பலகை.. மீறினால் அபராதம்.. அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு..!
கிருஷ்ணகிரியில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறிய முதல் பெரிய வணிக ரீதியிலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகள் இனி தமிழிலும் இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதிக்குள் நூறு சதவீதம் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பதை உறுதி செய்திட அம்மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் அதன் தொன்மையை காத்திடும் வகையில் தமிழக அரசு சிறியது முதல் பெரிய அளவிலான வணிகளவிலான கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைந்திருக்க வேண்டுமென புது முயற்சியை முன்னெடுத்து உள்ளது.
இதையும் படிங்க: 2026 தான் டெட்லைன்.. அதிமுகவை யாரும் காப்பாத்த முடியாது..! எச்சரிக்கும் சைதை துரைசாமி..!
இதனை மேற்கோள் காட்டிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதிக்குள் அனைத்து வணிக ரீதியிலான சிறியது முதல் பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்கள் அதன் பெயர் பலகைகளை தமிழிலும் இடம்பெற செய்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிறுவனங்களோ அல்லது கடைகளோ, பெயர் பலகைகளை தமிழில் இடம்பெறச் செய்யவில்லை எனில், அபராதம் விதிக்கப்படும் என்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயிலில் தொடரும் செல்போன் பறிப்பு.. அதிரடி காட்டிய ரயில்வே போலீசார்..!