×
 

ரயிலில் தொடரும் செல்போன் பறிப்பு.. அதிரடி காட்டிய ரயில்வே போலீசார்..!

சென்னையை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்படி கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் ரோந்து பணி மற்றும் திடீர் ஆய்வு என ரயில்வே போலீசார் அவ்வப்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடவடிக்கைகளை கடுமையாக்கிய நிலையிலும் சிலர் அவ்வப்போது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகவே இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அதன் வழித்தடத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. அப்போது பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

இதையும் படிங்க: மக்களே உஷார்.. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

அப்போது குச்சியால் காட்டி செல்போனை இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து செல்போனை பறி கொடுத்த இளைஞர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கவே, சம்பந்தப்பட்ட இடத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இளைஞர் பரத்குமார் என்பவர் செல்போன் பரப்பில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் பரத்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். முன்னதாக இது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: புதுச்சேரி - திருப்பதி இடையே ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share