வனத்துறையினருக்கு போக்கு காட்டிய கரடி.. கூண்டுக்குள் சிக்கியது எப்படி?
அம்பாசமுத்திரம் அருகே கடந்த 10 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில நாட்களாக கரடி ஒன்று மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதனால், அசம்பாவிதம் நிகழும் முன்பு கரடியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் இளையராஜா தலைமையில், வனத்துறையினர் நெசவாளர் காலனி அக்னி சாஸ்தா கோயில் பகுதியில் கரடியை பிடிக்க கடந்த 20 ஆம் தேதி அன்று கூண்டு வைத்தனர். கூட்டு வைத்து 10 நாட்கள் ஆன நிலையில் கரடி கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
இதையும் படிங்க: காமாக்கிய விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - 7 பயணிகள் படுகாயம்
இந்த நிலையில், கரடிக்காக வைக்கப்பட்ட கூண்டில் கரடி சிக்கிக்கொண்டதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரை இந்த வனத்துறையினர், கூண்டில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த கரடியை முழு பரிசோதனைக்கு பின்னர் காட்டில் விழுவதற்காண ஏற்பாடுகளை செய்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகள் உதயம்..அரசாணை வெளியீடு..