×
 

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்.. அதிரடி காட்டிய போக்குவரத்து போலீசார்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி ஏற்படுத்தும் சைலன்ஸர்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்களில் சைலன்ஸர் பொருத்தப்பட்டு இருசக்கர வாகனங்களை இயக்குவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

புகாரை எடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் சமயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக், பாலமுருகன் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸர்களை பறிமுதல்  செய்தும் ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து  எச்சரித்து அனுப்பினர்.

இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த ஆம்னி.. துரித முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு

மேலும் இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் புலி அட்டகாசம்.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் பொதுமக்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share