காவலர்களுக்கான சேம நலநிதி ரூ.8 லட்சமாக உயர்வு..! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
காவலர் சேம நலநிதி 8 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் பேசியிருந்தார். காவலர்களுக்கான திட்டங்களை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியில் தான் காவலர்களுக்கு அதிக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவலர் சேம நலநிதி 8 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், பணியில் இருக்கும் போது காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர்., காவல்துறை தொடர்பாக ஓ.எஸ். மணியன் பல கேள்விகளை கேட்டுள்ளதாகவும், கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும், இது குறித்து நாளை விரிவாக பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு செம ட்ரீட்..! பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!
இதையும் படிங்க: கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் ஜெயிலா? ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!!