×
 

கோடைகால சிறப்பு ரயில் அறிவிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கன்னியாகுமரி சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு வாராந்திர ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது தெற்கு ரயில்வே. அந்த வகையில், கன்னியாகுமரியில் இருந்து சார்லபள்ளிக்கு செல்லும் வாராந்திர ரயிலானது வியாழன் கிழமை அன்று 9.15க்கு புறப்படும். அதேபோல மறு மார்க்கத்திலும் சாரளப் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர ரயில் வியாழன் கிழமை மாலை 3.45 மணிக்கு புறப்படும். 

தற்போது கன்னியாகுமரியில் இருந்து சாரல பள்ளிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு முறையில் வருகின்ற ஏப்ரல் 4, 11,18,25 மே 02, 09, 16, 23, 30 ஜூன் 06, 13,20,27 ஆகிய தேதிகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று காலை 5.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் உதகை சிறப்பு மலை ரயில்.. ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

மறு மார்க்கத்திலிருந்து சாரல் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஏப்ரல் 2, 9, 16, 23, 30 மே 07, 14, 21, 28 ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் புதன்கிழமை அன்று இரவு 9.50 மணியளவில் புறப்பட்டு கன்னியாகுமரி  சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக சார்ந்த பள்ளிகள் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹோலி பண்டிகை எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share