வீட்டுக்குள் நுழைந்து.. வெளியேற முடியாமல் சிக்கி தவித்த புலி.. லாபகரமாக எஸ்கேப்- ஆனா பெண்..
ஓசூர் அடுத்த ஆனைக்கல் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த புலியை பெண்ணின் துரித செயலால் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநிலத்துக்கு உட்பட்ட ஆனைக்கல் பகுதி 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதன் வசிப்பிடுமாக கொண்டுள்ளது.
இதனை அடுத்து மனித வசுப்படத்திற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது. முன்னதாக மனித வனவிலங்கு மோதல்களை தடுக்கும் வகையில், வனத்துறையினர் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆணைகள் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக புலி நடமாட்டம் இருப்பதாக பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் வசிப்பிடத்திற்குள் சுற்றித்திரிந்த புலியானது இன்று திடீரென வெங்கடேஷ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.
இதையும் படிங்க: வேடிக்கை பார்க்கும் புலிகள்.. ரசித்த சுற்றுலா பயணிகள்.. வைரல் புகைப்படம்..!
அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடேசன் மனைவி, புலி வீட்டிற்குள் வருவதனை கண்டு துரிதமாக வீட்டை பூட்டி விட்டு வெளியேறியுள்ளார். இதனால் புலி வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளே சிக்கி தவித்தது.
இது குறித்து வெங்கடேசன் மனைவி வனத்துறையினருக்கு அளித்த புகார் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேரமாக புலியை பிடிக்க போராடினர். தொடர்ந்து நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர், வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி லாபகரமாக மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் புலி அட்டகாசம்.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் பொதுமக்கள்