சாலையை கடக்கும் போது ஒரு லுக்.. சிறுத்தையின் கம்பீர போஸ்.. கதிகலங்கிய பயணிகள்..!
திருநெல்வேலி சேர்வார் அணைக்கு செல்லும் சாலையில் ஒற்றை சிறுத்தை ஒன்று செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டுப்பன்றி உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது மலை பாதையில் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றி திரியும் நிலையில் ஏராளமான வனவிலங்குகள் மக்கள் வசிப்படத்திற்குள்ளும் வருகின்றன. இதனால் அவ்வப்போது மனித வனவிலங்கு மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள களக்காடு, முண்டந்துறை வனச்சரக அலுவலகத்திலிருந்து சேர்வலாறு அணைக்கு செல்லும் மலைப் பாதையில் ஒற்றை சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் நுழைந்து.. வெளியேற முடியாமல் சிக்கி தவித்த புலி.. லாபகரமாக எஸ்கேப்- ஆனா பெண்..
அந்த வீடியோவில், சாலையை கடக்க முயலும் சிறுத்தையானது நடு சாலையில் சிறிது நேரம் நின்று சாலையின் இரு பக்கமும் பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றது. வனத்துறையினர், மின்வாரிய துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் இந்த பாதையை வழக்கமான பாதையாக கொண்டிருந்த நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேடிக்கை பார்க்கும் புலிகள்.. ரசித்த சுற்றுலா பயணிகள்.. வைரல் புகைப்படம்..!