இயற்கை விவசாயிகளுக்கு இன்பமயமான செய்தி... வேளாண் பட்ஜெட்டில் இதை கவனிச்சீங்களா?
பட்ஜெட்டில் இயற்கை விவசாயிகளுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் மானியத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு, பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அமர்ந்திருக்கின்றனர். திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள 5-வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.
இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயிகளுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் மானியத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இயற்கை விவசாயிகளுக்கான அறிவிப்புகள்:
இயற்கை வேளாண்மையில் ரசாயன கலப்பு இல்லாத சுற்றுச்சூழலுக்கு உகந்த வகைகளில் கிடைக்கக்கூடிய வளங்களான பயிர்கள், கால்நடைகள் மற்றும் மரங்கள், ஆகியவற்றின் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஒருங்கிணைந்து விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வேளாண்மை பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் மொத்தம் ரூபாய் 12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.... வேளாண் பட்ஜெட்டில் லட்ச லட்சமாய் பரிசுமழை...!
இயற்கை வேளாண்மை ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைந்து குழுக்கள் அமைத்து 7 ஆயிரத்து 500 உழவர்கள் பயனடையும் வகையில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் இரண்டாண்டு திட்டமாக செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை துறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விலை பொருட்கள் எளிதில் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் பொருட்களை பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் சந்தைப்படுத்த உரிய வசதிகள் செய்து தரப்படும் என்றும், உழவர்களிடையே உயிர்மை வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை பரவலாக்கம் செய்திட 37 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு மானியம்:
தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 38,600
மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளை கண்டு விழிப்புணர்வு பெற்றிட சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு வேளாண்மை விலை பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்ய எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்கப்படும். உயிர்ம வேளாண்மை நிலையை அடைந்த உயிர் உழவர்களை ஊக்கிவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் உயிர்ம வேளாண்மை சான்றிதல் பெற உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து இலவசமாக பதிவு செய்யப்படும்.
ஆதி திராவிடர் பழங்குடியின சிறு குறு விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம், சுமை குடில்கள், நிழல் வேலை குடில்கள் அமைத்தல், சூரிய சக்தி உளர்த்திகள், சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்குதல், மதிப்புக் கூட்டம் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் வழங்குதல் போன்ற உயர் மதிப்பு திட்டங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறுகுரு உழவர்களுக்கு அவர்களின் பங்குத்தொகையினால் ஏற்படும் பொருளாதார சுமையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள 40 முதல் 50 சதவீத மானியத்திற்கு பதிலாக 60 முதல் 70 சதவீத மானியம் கூடுதலாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: திருக்குறள் சொல்லி பட்ஜெட் அறிவிப்பு... உழவுக்கு உயிர் கொடுக்கும் திட்டங்கள்!!