×
 

மின் கம்பி உரசி தூக்கி வீசப்பட்ட இளைஞர்..  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.. 

ஈரோடு அருகே உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வெங்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தியாக மூர்த்தி. இவர் கோவையில் உலக தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி ஐ டி படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் காரமடை தேர் விழாவை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பரிசாபாளையத்தை சேர்ந்த அவரது நண்பரை பார்க்க தியாக மூர்த்தி சென்றுள்ளார்.

 இருவரும் பெரிய கல்லுப்பட்டி முருகன் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது உயிர் மின்னழுத்த கம்பி ஒன்று அறிந்து ஆபத்தான முறையில் சாலையில் கிடந்துள்ளது. சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காத இளைஞர்கள் சென்று கொண்டிருந்தபோது தியாக மூர்த்தியின் மீது மின்கம்பி உரசி உள்ளது. உயர் மின் அழுத்தம் காரணமாக தூக்கி வீசப்பட்ட தியாகு மயக்கமடைந்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியால் அவர் தம்பியையே கண்டுபிடிக்க முடியல... 2 லட்சம் டன் நிலக்கரி..? கே.எஸ்.ஆர் தமாசு..!

தூக்கி வீசப்பட்ட தியாகுவை கண்டு அதிர்ச்சி அடைந்த தியாகுவின் நண்பர் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் புன்செய் புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தியாகுவை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தியாக மூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தியாகுமின் உடல் உடற்குறைவிற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஞ்ஞானியின் உயிரைப் பறித்த பார்க்கிங் தகராறு.. அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share