×
 

பேனர் வைக்க சென்ற இளைஞர்கள் பலி.. போலீசார் விசாரணை!

நெல்லை பாளையங்கோட்டையில் விளம்பர பலகை அகற்ற சென்ற நபர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

நெல்லை கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் நிறுவனத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரும்பு கதவு நிறுவனத்தின் விளம்பரங்களை நிலை மாநகர பகுதியில் வைத்து அதனை எடுப்பதற்கான ஒப்பந்தம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மாநகர பகுதி முழுவதும் விளம்பரப்பதாகிகளை வைத்துவிட்டு எடுக்கக்கூடிய பணியில் இன்றைய தினம் ஈடுபட்டனர்.

அப்போது பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் அருகே வைக்கப்பட்ட விளம்பர பதாகையை அகற்ற சென்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். வரும் வழியிலேயே பரிதாபமாக பேச்சிமுத்து உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ஆட்டோ மீது சரிந்து விழுந்த உதயநிதி கட்டவுட்.. இணையத்தில் பரவும் வீடியோ!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதாகை வைக்க சென்ற இடத்தில் இளைஞர் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் கம்பி உரசி தூக்கி வீசப்பட்ட இளைஞர்..  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share