×
 

இப்படியுமா சாவு வரும்..? பைக்கில் மறைந்திருந்த விஷப்பாம்பு.. பாம்பு கடித்து இளைஞர் பலி..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே, பைக்கில் மறைந்திருந்த விஷப்பாம்பு கடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பழைய ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் மணி. இவர் அதேபகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஷ் (வயது 20). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். உள்ளூரில் கிடைத்த வேலைக்கு சென்று வந்துள்ளார்.

நேற்று இவர் வீட்டிற்கு  வந்த நண்பர் கடைக்கு செல்லலாம் என அழைத்துள்ளார். அதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு ஹரீஸ்  வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார். நண்பருடன் வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு செல்வதற்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது ஹரீஷின் இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வண்டி வேகமாக செல்லும் போது மேடு பள்ளங்களில் ஏறி வண்டி குலுங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு விழித்துக் கொண்டு, பைக்கை விட்டு வெளியே வந்துள்ளது.

அவ்வாறு திடீரென பாம்பு வெளியே வந்து ஹரிஷின் நண்பரின் கையில் ஏறி உள்ளது. பாம்பை பார்த்து அச்சமடைந்த ஹரிஷின் நண்பர், அதனை தட்டி விட்டு அலறி உள்ளார். நண்பர் பாம்பை தட்டி விட்ட வேகத்தில் அந்த விஷப் பாம்பு பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ் மீது விழுந்துள்ளது. மேலும் ஹரிஷின் கையிலும் பாம்பு கடித்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஹரிஷின் நண்பர் அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க: பணிக்கு வராத அரசு மருத்துவர்..? வேறு டாக்டர் வைத்து சிசேரியன்.. பிறந்த 10 நிமிடத்தில் இறந்த குழந்தை..!

அங்கு ஹரிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக ஹரிஷை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். உடனே மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், கொடிய விஷம் பரவி உள்ளது என்றும் கூறி உள்ளனர். மருத்துவர்கள் சொன்னதும் ஹரிசை தேனி கொண்டு சொல்ல ஏற்பாடுகள் தீவிரமாகின. ஆம்புலன்ஸ்சில் செல்ல ரெடியான போது திடீரென ஹரிஷ் உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் அவசர சிகிச்சை அளிக்க முயன்றும் அவர் இறந்தார். 

தனது இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்ததில் உயிரிழந்த ஹரிஷ் குறித்து ராயப்பன்பட்டி  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை  வந்த போலீசார் ஹரிஷின் உடலை கைப்பற்றினர். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனையில் பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக்கில் பதுக்கி இருந்த பாம்பு கடித்ததில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அக்காவை இரும்பு ராடால் தாக்கிய தம்பி.. 13 வயது சிறுவன் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் அக்கா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share