பலருக்கு விற்கப்பட்ட +1 மாணவி... கொடூரர்கள் கையில் விலங்கு மாட்டிய போலீஸ்... சிக்கியது எப்படி?
உத்தரபிரதேசத்தில், கடத்தப்பட்டு பலருக்கு விற்கப்பட்ட பிளஸ் ஒன் மாணவியை நீண்ட நாட்களுக்கு பிறகு போலீசார் பத்திரமாக மீட்டனர்.
நாடு முழுவதுமே பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் கொண்ட குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
உத்தரபிதேச மாநிலம் மெயின்புரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு மே 18-ம் தேதி பயிற்சி மையத்துக்கு செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டார். அவருக்கு அறிமுகமான நீரஜ் என்ற இளைஞர் அந்த மாணவியை காரில் கடத்திச் சென்றிருக்கிறார்.
அதன் பிறகு தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு 17 வயதான அந்த மாணவி அனுபவிக்காத துயரங்கள் இல்லை. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு போவதாக தான் முதலில் அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் வழியில் ஒரு ஊரில் கடத்திச் சென்றவர் அந்த மாணவியை ஒருவரிடம் விற்பனை செய்து விட்டு தப்பி சென்று விட்டார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல ஊர்களில் அவர் விற்பனை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இறுதியாக அஜ்மீரில் இருந்த ஆஷா என்பவரின் கையில் அந்த மாணவி வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் விஷ்ணு மாலி என்பவருக்கு 3 1/2 லட்சம் ரூபாய்க்கு அந்த சிறுமியை விற்று விட்டார்.
இதையும் படிங்க: அகோரியாக மாறினார் ! 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்
சிறுமியை விலைக்கு வாங்கிய விஷ்ணு மாலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். நீண்ட காலமாக திருமணம் கைகூடாத நிலையில் இருந்த அவர், அந்த சிறுமியை திருமணம் செய்ய இருக்கும் மகிழ்ச்சியில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவற்றை சமூக வலைத்தளங்களிலும் அவர் பகிர்ந்து இருந்தார்.
ஆனால் இதன் மூலம் தான் கடத்தப்பட்ட மாணவிக்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. சமூக வலைத்தள பதிவு ஒன்றில் மெயின்புரியில் சிறுமியை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டார். சிறுமி கடத்தப்பட்டது குறித்து ஏற்கனவே புகார் செய்யப்பட்டிருந்த காவல் நிலையத்தில் அது குறித்து அவர் தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து உ.பி. போலீஸார் அஜ்மீர் சென்று விஷ்ணு மாலியை கைது செய்து, சிறுமியை மெயின்புரிக்கு அழைத்து வந்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், சிறுமியை முதலில் கடத்திய நீரஜையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பிஎன்எஸ் மற்றும் போஸ்கோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கும்பமேளா பியூட்டி' மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு: " இதுதான் என் உலகம்..." டெண்ட் கொட்டாய் வீடு காட்டி வீடியோ போட்டு உருக்கம்..!