வெண்ணை மலை முருகன் கோயில் தேரோட்டம்... மக்களோடு மக்களாக தேரை வடம்பிடித்து இழுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி...!
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பக்தர்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தார்.
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பக்தர்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தார்.
கரூர் மாநகரை வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 3 - ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு விதமான அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும், கடந்த 09-ஆம் தேதி கோவிலில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது .
இதையும் படிங்க: 'ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வரானவர் எங்களுக்கு வகுப்பெடுக்கலாமா..?' எடப்பாடியாருக்கு செந்தில் பாலாஜி சம்பட்டி அடி..!
இன்று காலை சுவாமிக்கு பால், பன்னீர் , இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் பாலசுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ச்சியாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் .
பின்னர் திருவிழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா என்ற கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது மலைக்கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் நிலையை அடைந்தது. வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தைப்பூச திருவிழா 2025... பழனியில் விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்...!