திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் இக்கோயிலில் பங்குனி தேரோட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலின் உபகோயிலாகும். சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக விளங்கும் இக்கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கோயில் பணியாளா்கள், கிராம மக்கள் பூக்களை கூடையில் ஏந்தி, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனா்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. 5 வீரர்கள் படுகாயம்..!

பூச்சொரிதல் விழாவையொட்டி உலக மக்களின் நன்மைக்காக அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் தொடங்கியது. மேலும் அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் பூக்களை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனா். இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் இணை ஆணையா் தலைமையில் கோயில் குருக்கள், பணியாளா்கள் செய்தனா்.
இதையும் படிங்க: நாண்மதிய பெருமாள் கோவில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!